துணை முதல்வர் உதயநிதியை அணுஅணுவாக ரசித்து சொற்பொழிவாற்றிய கவிஞர் வைரமுத்து; விபரம் உள்ளே.!
சென்னையில் நடைபெற்ற திருச்சி சிவா நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, அவையோர் முன்னிலையில் உரையாற்றி இருந்தார்.
ரசித்திருக்கிறேன்
அப்போது வைரமுத்து பேசுகையில், "துணை முதல்வராக பொறுப்பேற்றபின், இன்றுதான் உதயநிதியை நேரில் பார்க்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பரவசம் வந்தது. அவரை பார்த்து இதுவரை ரசித்திருக்கிறேன். அவரின் மெல்லிய நடை, மில்லிமீட்டர் புன்னகை, அசைவுகள், மேடையில் தெரிகின்ற சின்ன நகைச்சுவை, தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது அளவான மரியாதையை ஆகியவற்றை நான் ரசித்திருக்கிறேன்.
கொள்கையால் மதிக்கிறேன்
எப்போதும் மதித்தேன் என்பதற்கும் ஒரு காரணம் என்று. என்று தான் ஒரு கருத்தைச் சொல்லி, அந்த கருத்தில் உயிரே போனாலும் மரமாட்டேன் என உறுதியாக நின்றாரோ, அங்கே நிற்கிறார் கலைஞர் பேரன், ஸ்டாலின் மைந்தன் என நிற்கிறார். ரசிக்க உடை, பாவனை போதும், அசைவுகள் போதும். ஆனால், மதிப்பதற்கு கொள்கை வேண்டும். திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க இளைஞர் ஒருவர் இங்கு இருக்கிறார் என்பதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
இதையும் படிங்க: முன்னாள் பெண் போலீசை ஏமாற்றிய இன்ஸ்டா பிரபலம்.. எப்.ஐ.ஆர் போட்டதும் தலைமறைவு.!
ஒரே செங்கல்லால் சாம்ராஜ்யம் அமைத்தவர்
ரோமானிய சாம்ராஜ்யம் ஒருநாளில் கட்டப்பது அல்ல, ஒவ்வொரு செங்கலாய் கட்டப்பது என முதுமொழி உள்ளது. இந்த முதுமொழியை உடைத்தவர் உதயநிதி. அவரின் சாம்ராஜ்யம் ஒரே செங்கல்லால் கட்டப்பட்டது. ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்டது. ஒன்றிய அரசின் செங்கல்லால் கட்டப்பட்டது. இந்த சாமர்த்தியத்தை பார்த்து நான் மதிக்கிறேன், வியக்கிறேன். அரசியலிலும் அவர் பெரும் உருவமாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: சென்னை ஐஸ்வர்யா மால்-ஐ வாரித்தூற்றிய பொதுமக்கள்.. ஆபர் அறிவிப்பு கேன்சலால் குமுறும் மக்கள்.. கொக்கரிப்பு.!