மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோம்பை ரக நாயால் தப்பித்த தொழிலதிபரின் இலட்சக்கணக்கான பணம், நாய்... 2 ஆயிரத்தோடு எஸ்கேப் ஆன திருட்டுக்கும்பல்.!
நாட்டு ரக நாயை வளர்த்து வந்த தொழிலதிபருக்கு விஸ்வாசமாக இருந்த நாயின் குணத்தால் தொழிலதிபரின் பணம், நகை திருட்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒருவேலை நாய் கயிற்றால் கட்டப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில் திருடர்களின் கறி பதம்பார்க்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சகோதரர் தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 67). இவர் தொழிலதிபர் ஆவார். விவசாய தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, மகன், மகள் இருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் விஜயகுமார் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.
கடந்த 15-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாடும் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சைரன் சத்தத்துடன் அதிகாரிகள் நேரில் விரைந்ததால், மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது. அங்கு நடந்த சோதனையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.
மேலும், பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடைக்கவே, விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த விஜயகுமார் 16-ம் த்தி வீட்டிற்கு வந்து பார்க்கையில் பணம், நாய் அப்படியே இருந்துள்ளது. கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதும் உறுதி செய்யப்பட்டது.
விஜயகுமார் சில்லறைகளை சேர்த்து வைத்திருந்த நிலையில், அதனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். ஆனால், அந்த சில்லறை பையும் அருகே இருந்த மரத்தில் இருந்து மீட்க்கப்பட்டது. பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மட்டும் திருடுபோயுள்ளது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகள் சேமிப்பட்டன. இதுகுறித்து விஜயகுமாரின் அண்டை வீட்டார் தகவல் தெரிவித்தார்.
அதாவது, விஜயகுமாரின் வீட்டில் நாய் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அது சம்பவ நாளில் வழக்கத்தை விட மாறுதலாக குரைத்துள்ளது. இதனால் மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் மற்றும் விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வருவதற்குள் கொள்ளை கும்பல் தப்பி சென்றுள்ளது.
தொழிலதிபர் விஜயகுமாரின் வீட்டில் இருக்கும் நாய் கோம்பை இன நாயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நாயின் சத்தமே பக்கத்து வீட்டாரை சந்தேகிக்க வைத்து தங்களின் வீட்டில் இருந்து வந்து பக்கத்து வீட்டை பார்க்க வைத்துள்ளது.