சீமானுக்கு புதிய ஆண்டில் புதிய வாரிசு; உற்சாகத்தில் தொண்டர்கள்.!



namtamilar---director-seeman---kayalveli---new-born-chi

இயக்குனர் சீமான், கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததையொட்டி அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் சீமான். இவர் இயக்கி நடித்த படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பறை பெற்றது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக இவருடைய படங்கள் அமைந்தன. அவ்வகையில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



 

இந்நிலையில் சில காலமாகவே திரைத்துறையிலிருந்து விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் அவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். 



 

தற்போது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் புத்தாண்டின் தொடக்கத்தில் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான் அப்பாவானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சீமானுக்கு கிடைத்த எல்லையில்லா மகிழ்ச்சியை நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.