மாரடைப்பில் மகன் மரணம்.. தகவல் கேட்டு தாயும் மரணம்.. நெல்லையில் பெரும்துயரம்.!



nellai men and mother died in same time in mukkoodal

திடீர் மாரடைப்பு

நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கலைமணி, நடராஜன் என்ற தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை சென்றுள்ளார். அங்கு உறவினர் வீட்டில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். 

Thirunelveli

தாயும் மரணம்

அவரின் உடல் இறுதி சடங்குக்காக சொந்த ஊரான முக்கூடலுக்கு கொண்டுவரப்பட்டது. இதை பார்த்து சுரேஷின் தாய் கலைமணி துக்கம் தாங்காமல் கதறி அழுத்துள்ளார். அப்போது, மயங்கி விழுந்த கலைமணி அப்போதே உயிரை விட்டார். தாய் , மகன் இருவரின் உடல்களும் ஒரே வாகனத்தில் வைத்து அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: எச்சரிக்கை பாடம் இது.. 3ம் வகுப்பு சிறுமி மாரடைப்பால் மரணம்.. சுருண்டு விழுந்து சோகம்.! 

இதையும் படிங்க: மங்களூரில் நடந்த வங்கிக்கொள்ளையில் 3 தமிழர்கள் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!