ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மங்களூரில் நடந்த வங்கிக்கொள்ளையில் 3 தமிழர்கள் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் கே.சி சாலை பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து மாயமானது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மும்பையைச் சேர்ந்த கண்ணன் மணி என்பவரை கைது செய்தனர். இவரை கைது செய்ய சுற்றிவளைக்கும்போது, பீர் பாட்டில் கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் அதிகாரிகள் கண்ணனை சுட்டுப்பிடித்தனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; கடத்திச் சென்று துணிகரம்.!
நெல்லையில் குற்றவாளிகள் கைது
மருத்துவமனையில் கவலைகளுடன் கண்ணனும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரித்தபோது மங்களூர் வங்கிக்கொள்ளை விவகாரம் அம்பலமானது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கூட்டாளிகள் மூலமாக நெல்லைக்கு சென்றதும் உறுதியானது. இதனையடுத்து, நெல்லை விரைந்த மங்களூர் தனிப்படை அதிகாரிகள், உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்தனர்.
உறவினர்கள் கலாய்த்து விபரீதத்தில் முடிந்தது
விசாரணையில், மும்பையில் இருந்து காரில் ஊருக்கு செல்லும் வழியில், மங்களூரில் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த முருகாண்டி, ஜோஸ்வா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் உள்ளூரில் வேலை இல்லாமல் வெட்டியாக சுற்றி வந்துள்ளனர். இதனால் உறவினர்கள் மும்பை சென்று பிழைத்த வாருங்கள் என கலாய்த்து இருக்கின்றனர்.
உறவினர்களின் வார்த்தை தங்களை அதிகம் பாதித்ததுபோல நினைத்தவர்கள், மும்பை சென்று முன்னேற முடிவெடுத்து கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது கண்ணன் மணியுடன் ஜோஸ்வா, முருகாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அம்பாசமுத்திரம் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மங்களூர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதையும் படிங்க: தாய், தந்தை, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு; பெங்களூரில் நடந்த சோகம்.. கலங்கவைக்கும் துயரம்.!