மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!
திருச்சியில் புதிதாக காதல் திருமணம் செய்து கொண்ட நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த வாலிபர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் மெய்யநாதன்(30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்வு சுமுகமாக சென்றாலும் நாளடைவில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை
புதிதாக திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த மெய்யநாதன், திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கிய அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விடுதி நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: "தாத்தா சாக்லேட் வாங்கி தரேன்.." 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெண் உட்பட இருவர் கைது.!!
வழக்கு பதிவு செய்து விசாரணை
இதனைத் தொடர்ந்து தனியார் விடுதிக்கு சென்ற காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட மெய்யநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக காதல் திருமணம் செய்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சிக்கிய தலை.!! இரண்டாவது மனைவி கொடூர கொலை.!! கணவன், மாமியார் கைது.!!