சிக்கிய தலை.!! இரண்டாவது மனைவி கொடூர கொலை.!! கணவன், மாமியார் கைது.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி 8 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவன் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உடல் பாகங்களை காவல்துறை கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இரண்டாவது திருமணம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்த இவர் பைனான்ஸ்க்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமான நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து சரண்யா என்ற 29 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர்.
மாயமான மனைவி
இரண்டாவது மனைவியுடனும் கோபிக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய தினம் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவரது மனைவி சரண்யா வீட்டிலிருந்து மாயமாகி இருக்கிறார். இது தொடர்பாக குழந்தைகள் அம்மா எங்கே.? என்று கேட்டபோது பாட்டி வீட்டுக்கு சென்றதாக கோபி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!
காவல்துறையில் புகார்
மேலும் தனது மனைவி காணாமல் போனது குறித்து 4 நாட்கள் கழித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் கோபி. இது தொடர்பாக காவல்துறையினர் சரண்யாவின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சரண்யா, தாய் வீட்டிற்கு சென்றதாக கோபி கூறியதையும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரண்யாவின் பெற்றோர் தனது மகள் தங்கள் வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கோபி மற்றும் அவரது தாய் மீது திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் சரண்யாவின் பெற்றோர் புகாரளித்தனர்.
8 துண்டுகளாக வெட்டி கொலை
இந்தப் புகார் தொடர்பாக கோபியின் வீட்டிற்கு காவல்துறையினர் விசாரிக்க சென்ற போது அவர் வீட்டிலிருந்து தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து கோபியின் தாயிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்தது. அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சரண்யாவை தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து, உடலை சூளகிரி மலைப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கோபியையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சூளகிரி காட்டுப்பகுதிக்குச் சென்று கொலை செய்யப்பட்ட சரண்யாவின் உடல் பாகங்களை மீட்டனர். இதில் தலை மற்றும் ஒரு சில பகுதிகள் மட்டுமே காவல்துறைக்கு கிடைத்திருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!