#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"குடி குடியை கெடுக்கும்.." போதையால் சீரழிந்த குடும்பம்.!! புதுமண தம்பதி தற்கொலை.!!
திருத்துறைப்பூண்டி அருகே 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான காரணம் வெளியாகி இருக்கிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் உதய பிரகாஷ். 23 வயதான இவர் நாகப்பட்டினம் மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்த ஹேமா என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் காதல் ஜோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டூர் பகுதியில் புதுமண தம்பதியினர் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ஜோடி
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஹேமா மற்றும் பிரகாஷ் ஆகியோர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.
இதையும் படிங்க: "இனி குடிச்சிட்டு வருவ.." போதையில் உறங்கிய கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயில் அபிஷேகம்.!! மனைவி கைது.!!
சாவுக்கு காரணமான மது பழக்கம்
இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இருவரது மரணத்திற்கும் பிரகாஷின் குடிப்பழக்கம் தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது. திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே தினமும் குடித்து விட்டு வந்த பிரகாஷ் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். இதனால் விரக்தியடைந்த ஹேமா தற்கொலை செய்துள்ளார். தனது காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத பிரகாசும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார். குடிப்பழக்கத்தால் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அட கொடுமையே... 16 வயசு பொண்ணுக்கு பாலியல் தொல்லை.!! தமிழாசிரியர் கைது.!!