"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
நித்தியானந்தாவின் இருப்பிடம் தெரிந்தது? தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில்.!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமியாராக வலம்வந்த நித்தியானந்தா, அன்னாசிப்பழ கர்ப்ப விஷயத்தில் சிக்கி பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, நித்யானந்தாவுக்கு குவிந்த ஆதரவு காரணமாக பல மடங்கள் ஏற்படுத்தப்பட்டு, நித்யானந்தா இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.
அவர் தன்னிடம் சீடர்களாக சேர்ந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஒருகட்டத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு விசாரணை உச்சம் பெற்று, அவர் தலைமறைவானார்.
இதையும் படிங்க: வீட்டில் தந்தை-மகள் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்; விளக்கம் அளித்த அன்னபூரணி தரப்பு.!
ரெட் கார்னர் நோட்டிஸ்
நித்யானந்தா எங்கு போனார்? உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தெரியாமல் இருந்த நிலையில், அவர் கைலாஸா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார். நித்யானந்தாவை பிடிக்க ரெட் கார்னர் நோட்டிசும் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, தனது நாட்டுக்கு உலகளவில் அங்கீகாரம் வாங்கும் பணிகளில் நித்யானந்தா களமிறங்கி செயல்பட்டு, அதற்கான நாணயம் மற்றும் ரூபாய் வெளியிட்டு இருந்தார். தனது இணையவழி சேனல் வாயிலாக தினமும் அவர் உரையாற்றியும் வருகிறார்.
ஈக்வடாரில் இருக்கிறார்
இந்நிலையில், நித்யானந்தாவுக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் உள்ள மடங்களை நிர்வகிக்க, தக்கார் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா தரப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையில், தமிழ்நாடு அரசு தரப்பு நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பித்த நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் ஒருபக்கம் மத்திய புலனாய்வுத்துறை அவரை தேடி, இன்று வழக்கின் நிலை என்ன என தெரியாமல் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு நித்யானந்தாவை ஈக்வடாரில் இருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் நித்யானந்தாவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நித்யானந்தா, பிரேமானந்தா என பிரச்சனைகள் தொடருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாறாரு.. புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!