"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
வீட்டில் தந்தை-மகள் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்; விளக்கம் அளித்த அன்னபூரணி தரப்பு.!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயல், விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த சாமுவேல் சங்கர் (வயது 78), அவரின் மகள் எழில் (வயது 37) ஆகியோர் சமீபத்தில் படலமாக மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மருத்துவர் எபனேசர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் தங்கியிருந்த வீடு, சமீபத்தில் ஆன்மீகத்தில் களமிறங்கி, அன்னபூரணி அரசு அம்மா என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிரபலம் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து அன்னபூரணி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "சென்னை திருமுல்லைவாயில் vgn staffird ல் எனக்கு சொந்தமான வீட்டை டாக்டர் சாமுவேல் எபினேசர் என்பவருக்கு அதே அபார்ட்மென்டில் குடியிருக்கும் தெரிந்தவர்கள் மூலம் பிப்ரவரி 01 2024 அன்று டாக்டருக்கு வீடை வாடகைக்கு விட்டேன். அவர் தன்னுடைய குடும்பத்தில் 3 நபர்கள் நான் என்னுடைய சகோதரி என்னுடைய அப்பா என்று கூறி நான் வேலுர் குளோபல் ஆஸ்பிட்டலில் டாக்டராக பணிபுரிவதாக கூறி வாடகைக்கு வந்தார்.
இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாறாரு.. புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!
நேரில் பார்த்தது கூட இல்லை
நான் அவரை பார்த்ததோ பேசியதோ கூட கிடையாது. நான் 3 வருடங்களாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வசித்து ஆன்மீக சேவை செய்து வருவதால் இதில் எல்லாம் நான் நேரடியாக தலையீடு செய்வதில்லை. ரெண்டல் அக்ரிமெண்ட் போட்டு இங்கு கொரியர்தான் அனுப்பபட்டது. கடந்து 5 மாதமாக டாக்டர் வீட்டு வாடகையும் கொடுக்காமல் வீடை காலியும் செய்யாமல் நான் யாரிடம் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து இருந்தேனோ அவர்களிடம் எதாவது காரணம் சொல்லி வீடு காலி செய்வதை தள்ளி போட்டு கொண்டே இருந்தார்.
அதனை தொடர்ந்து டிசம்பர் 27 2024 அன்று திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் நான் டாக்டர் மீது வீட்டு வாடகையும் கொடுக்காமல் வீடை காலியும் செய்யாமல் இருக்கிறார் என்று புகார் அளித்திருந்தேன்.
அதன் பிறகு டாக்டரை போலிஸ் விசாரித்து ஜனவரி 31 க்குள் வீடை காலி செய்து மீதி வாடகையையும் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துவிட்டு சென்றார். அதன் பிறகு நேற்று முதல் நாள் இரவு 8.45 மணிக்கு போலிஸ் எனக்கு போன் செய்து அங்கு நடந்த சம்பவத்தை எனக்கு தெரிவித்தார்கள்.
அவதூறு வேண்டாம்
அதை கேட்டு எனக்கே அதிர்ச்சியாகதான் இருந்தது. ஆனால் இது சம்பந்தமாக சிலர் நிறைய பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். என்ன நடந்தது என்று வீட்டு உரிமையாளர் என்ற அடிப்படையிலும் பொது வழியில் ஆன்மீக சேவையில் இருப்பதாலும் நான் இந்த விளக்கத்தை தர கடமைபட்டு இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் காரை மறித்து பெண்களை துரத்திய இளைஞர்கள்.! கைக்குழந்தையுடன் பதறிய சென்னை பெண்கள்.!!