"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மை வி3 ஆட்ஸ் மோசடியை அம்பலப்படுத்திய அரசியல்கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி?.. பகீர் சம்பவம்.!
கோவையை மையமாக வைத்து செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் (MyV3 Ads) நிறுவனம், விரைவில் மோசடி செய்து தலைமறைவாகவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி, கோவை மட்டுமல்லாது மை வி3 நிறுவனத்தில் முதலீடு செய்த பிற மாவட்ட மக்களுக்கும் பல்வேறு எச்சரிக்கையை தெரிவித்து வந்தார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே, இவர்கள் மொத்தமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் முதலீடு என பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்தது தெரியவந்தது.
விற்பனை செய்யப்படும் மை வி3 நிறுவன சொத்துக்கள்
மேலும், சமீபகாலமாக மக்களிடம் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு, தனது ஆதரவாளர்கள் புடைசூழ பதில் சொன்னவர்கள் பிற்காலத்தில் பின்வாங்க தொடங்கினர். அந்நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு நேரடி மற்றும் மறைமுக சொத்துக்கள் அனைத்தும் வந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க: குழந்தையின்மை, கடன் தொல்லையால் விரக்தி; மின்கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை.!
இந்த விஷயம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவலை அசோக் ஸ்ரீநிதி பகிர்ந்து வந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் மோசடியாக பணம் பெற்ற நிதி நிறுவனங்களின் பட்டியலில் மை வி3 ஆட்ஸ் ஆப் கொண்டு வரப்பட்டு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
மைவி3 ஆப் நீக்கம்
இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்த நிலையில், அவர்களின் பணம் தொடர்பான விஷயமும் கேள்விக்குறியை சந்தித்தது. இந்நிலையில், மை வி3 நிறுவனம் குறித்து தொடக்கத்தில் இருந்து எச்சரித்து வந்த பாமக பிரமுருகரை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளன.
இதில் இருந்து தப்பித்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக நிர்வாகி எனக்கூறும் நபரின் விபரங்களை பகிர்ந்து, தன்னை கொலை செய்ய முயற்சித்தவர் இவர்தான். என்னை பாதுகாத்து, எனக்கு உறுதுணையாக இருந்த பாமகவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், யூடியூபர் மற்றும் நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அசோக் ஸ்ரீநிதிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
என்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர் A1 இவர்தான்.
— Ashok Srinithi (@AshokSrinithi) August 12, 2024
அவனின் Phone குறித்த தகவல்-
பிடித்து வந்து அதிகாரிகள்: போனை எடுத்து வந்தோம் காவல் நிலையத்தில் தான் உள்ளது.
இன்ஸ்பெக்டர்: போன் தொலைந்து விட்டது.
நேற்று AC: போன் கிடைத்துவிட்டது என்னிடம் தான் உள்ளது.
இன்று AC: போனை உடைத்து விட்டான். pic.twitter.com/76mgP9Z8es
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்த ஆடை மீட்கச் சென்றவர் பரிதாப பலி; கயிறு அறுந்துபோனதால் துயரம்.!