#Big News: ஒரேயொரு ட்விட்.. மொத்த தமிழக அரசியல்களமும் அதிர்ச்சி.. பாமக ராமதாஸ் சொல்ல வருவது என்ன?



PMK Ramadoss Tweet about Olden Poet Ideology 

 

தமிழக அரசியலில் மூத்த தலைவராக இருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இவரது மகன் அன்புமணி ராமதாஸ் தற்போது கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக அங்கம் வகித்து இருந்தது. எதிர்வரும் 2026 தேர்தலுக்காக தற்போது தயாராகி வரும் நிலையில், இந்த தேர்தல் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக தேர்தல்களில் ஒன்றாகியுள்ளது. 

இதையும் படிங்க: தவெக தலைமைக்கு ஷாக் தந்த நிர்வாகிகள்.. பாமகவில் திரண்டு வந்து இணைவு..! காரணம் என்ன?.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகி அதிமுகவை தோற்றுவித்ததுபோல, 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாற்றத்தை கட்டாயம் தருவேன் என நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என கட்சியாக பதிவு செய்து அரசியலில் நுழைந்துள்ளார். 

pmk

கொள்கை அறிவிப்பு மாநாடும் விக்ரவாண்டியில் நடைபெற்ற நிலையில், தங்களுடன் கூட்டணி அமைப்போருக்கு, தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சி அமைந்ததும் அதிகாரத்தில் பங்கு எனவும் அறிவிப்பு வெளியிட்டார். விஜயின் அதிகார பங்கு பேச்சு பெரிதளவும் கவனிக்கப்பட்டது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், தனது சமூக வலைதளப்பக்கத்தில், "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" என பதிவிட்டுள்ளார். அதாவது, காலத்திற்கேற்ப மாறுதலை ஏற்றுக்கொள்ளலாம் என பொருளை கொண்ட பவணந்தி முனிவரின் நன்னூல் வரிகளை மேற்கோளிட்டு ட்விட் பதிவு செய்துள்ளார். 

pmk

இந்த பதிவு தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ள நிலையில், அவர் விஜயின் அரசியல் வருகையை ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. ஏனெனில், பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இருக்கும் பாமக முந்தைய காலங்களில் முக்கிய கட்சியாக இருந்து, இன்று கூட்டணிகளால் பல விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறது. 

இதனிடையே, அவர் புதிய கூட்டணியை ஏற்க தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக தலைவர் அன்புமணியும் 2026 தேர்தலில் புதிய வெற்றிக் கூட்டணி அமையும் என முன்னதாகவே தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BigBreaking: மாநாடு மிகப்பெரிய வெற்றி - தவெக தலைவர் விஜய் நெஞ்சார்ந்த நன்றி..! பரபரப்பாகும் அரசியல்களம்.!