திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறுவீடு வந்த போலீஸ் மாப்பிள்ளை.! அடித்து, வெளுத்தி மாமியார் வீட்டிற்கே அனுப்பிய பெண் வீட்டார்.! நடந்தது என்ன??
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் எம்.காம்., சி ஏ முடித்துவிட்டு மார்த்தாண்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் மார்த்தாண்டம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ராஜேஷும் அந்தப் பெண்ணின் தாய், தந்தையுடன் நெருங்கி பழகி அடிக்கடி அவர்களது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.
காதல் திருமணம்
இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ராஜேஷிடம் அவரது பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால், ராஜேஷ் தான் சென்னையில் வசித்து வருவதாகவும், தான் அனாதை. தனக்கு யாரும் இல்லை என கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் ராஜேஷுக்கும், அந்த பெண்ணிற்கும் தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: தன்னுடைய நிச்சயதார்த்த விழாவிற்கு காதலனுக்கு அழைப்பு விடுத்து காதலி செய்த செயல்... அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!
ஏமாற்றிய மாப்பிள்ளை
திருமணம் முடிந்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களை கண்ட பக்கத்து வீட்டு காவலர் பெண் தனக்கு மாப்பிள்ளையை தெரியும் எனவும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே எனவும் சந்தேகம் அடைந்துள்ளார். தொடர்ந்து மணமக்களை போட்டோ எடுத்த அவர் அதை காவலர் வாட்ஸ்அப் குரூப்பிற்கு அனுப்பியுள்ளார்.அதனை கண்ட ஏராளமானோர் ராஜேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
அடித்து, வெளுத்திய பெண் வீட்டார்
பின்னர் இதுகுறித்து பெண் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார் ராஜேஷை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!