திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தன்னுடைய நிச்சயதார்த்த விழாவிற்கு காதலனுக்கு அழைப்பு விடுத்து காதலி செய்த செயல்... அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலை இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஏற்று கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இளம்பெண்ணின் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த இளம்பெண் தனது காதலனுக்கு போன் செய்து வரவழைத்து விருந்தினர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் நான் இவரை தான் காதலிக்கிறேன், இவரை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கூறி அவருடன் சென்றுள்ளனர்.
அப்போது அந்த இளம்பெண்ணை உறவினர்கள் சிலர் தடுத்த நிலையில் காதலனின் நண்பர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் போலீசாரிடம் தனக்கு 21 வயது ஆகிறது என்பதால் சட்டப்படி நான் செய்து கொண்ட திருமணத்தை ஏற்றுக் கொண்டு ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்ணை மூர்க்கமாக முட்டிதூக்கிய எருமை; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
போலீசார் அந்த இளம் ஜோடியை வாழ்த்தியதுடன் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து சமாதானம் பேசி உடன் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!