"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பொள்ளாச்சியில் அதிர்ச்சி... பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா.!! பயிற்சி மருத்துவர் கைது.!!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்கள் மற்றும் நர்ஸ் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பயிற்சி மருத்துவரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமரா
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்துவதற்கு என தனியான கழிப்பறை உள்ளது. நேற்று மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் கழிவறைக்கு சென்ற போது அங்கிருந்த பிரஸ்ஸில் பேனா போன்ற ரகசிய கண்காணிப்பு கேமரா பொறுத்தபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஆர்பிஓ-விடம் புகார் செய்தார்.
சிக்கிய பயிற்சி மருத்துவர்
இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய ஆர்பிஓ மாரிமுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்எஸ் ஆர்த்தோ படித்து வரும் பயிற்சி மருத்துவரான வெங்கடேஷ்(33) என்பவர் மருத்துவமனையின் கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.
இதையும் படிங்க: 'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!
கைது செய்து விசாரணை
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவர் வெங்கடேஷ் இதுபோன்று தான் பணியாற்றும் பிற மருத்துவமனைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருக்கிறாரா.? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையில் பொருத்துவதற்காக ரகசிய கேமராவை ஆன்லைன் மூலம் வெங்கடேஷ் வாங்கி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!