#Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 



School College Leave due to Rain 

 

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்த பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் கனமழை கொட்டி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, தற்போது அவை அகற்றப்பட்டன. 

இதனிடையே, கரையை கடந்த புயல் புதுச்சேரிக்கு அருகேயே மையம் கொண்டதன் காரணமாக, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விடிய-விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அதிக மழை காரணமாக, சங்கராபரணி, தென்பெண்ணை, கெடிலம் உட்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. நாளை வடகடலோர மாவட்டம், வடமேற்கு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விகொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

அதேபோல, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #Breaking: விழுப்புரத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக வெளியானது அறிவிப்பு.!