#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேர்தலில் தோல்வி.! உடனே நடிகை ராதிகா சரத்குமார் போட்ட பதிவு.! என்ன பார்த்தீங்களா!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
வெற்றி வாய்ப்பை இழந்த ராதிகா சரத்குமார்
இந்த நிலையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டிருந்தார். அவர் 1,64,149 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
நடிகை ராதிகா பதிவு
இந்த நிலையில் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் , 'எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்களில் யாரெல்லாம் போரிட்டார்கள் என்பதை சொல்வதற்காகவே நடத்தப்படுகின்றது. நான் படித்த வரிகள்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 11,12 ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வு.! எப்பொழுது?? கால அட்டவணை வெளியீடு!!
Not all battles are fought for victory, some are fought simply to tell the world that someone was there at the battlefield.
— Radikaa Sarathkumar (@realradikaa) June 4, 2024
A quote I read 🙏🙏🙏 pic.twitter.com/PH2WJMBTUb
இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!