12 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; பீரோ விழுந்து துடிதுடித்து மரணம்.!



  Ramanathapuram 12 Year Old Boy Died 

வீட்டில் சிறார்கள் விளையாடிக்கொண்டு இருந்தால், அவர்களை கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நம்புதாளை பகுதியில் வசித்து வருபவர் விஜய். இவரின் மகன் மனோஜ் (12). சிறுவன் தொண்டி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார். 

பீரோ-ஜன்னலை இணைத்து ஊஞ்சல் கட்டி விளையாட்டு

சம்பவத்தன்று, அப்பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டில், சிறார்களுடன் மனோஜ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, ஜன்னல் - பீரோ இடையே கயிறு கட்டி ஊஞ்சலில் மனோஜ் விளையாடியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: திருமணமான 8 மாதத்தில், கர்ப்பிணி மனைவியை பரிதவிக்கவைத்து மரணம்; ஆசையை நிறைவேற்ற முயன்று துயரம்.!

12 Year Old Boy Died

எதிர்பாராத விதமாக அழுத்தம் தாங்காமல் பீரோ சிறுவனின் மீது கவிழ்ந்துவிட, மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்களே கவனம்.. காய்ச்சலுக்கு மெடிக்களில் ஊசி செலுத்திய 18 வயது மாணவர் பலி; சென்னையில் சோகம்.!