#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
திருமணமான 8 மாதத்தில், கர்ப்பிணி மனைவியை பரிதவிக்கவைத்து மரணம்; ஆசையை நிறைவேற்ற முயன்று துயரம்.!
3 மாத கர்ப்பிணி மனைவி இளநீர் கேட்க, ஆசை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முயன்ற கணவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, தெற்குத்திட்டை பகுதியில் வசிப்பவர் குமார், இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருக்கிறார். சென்னை வண்டலூரில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்தராஜுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் நீதிகா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து, தற்போது அவர் 3 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
இளநீர் பரித்தபோது சோகம்
இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருக்கும் தாயின் வீட்டில் இருக்கிறார். சம்பவத்தன்று ஆனந்தராஜ் மாமியார் வீட்டிற்கு சென்ற சமயத்தில், நீதிகா இளநீர் கேட்டுள்ளார். இதனால் வீட்டின் பின்பக்கம் இருக்கும் மரத்தில் ஏறிய ஆனந்தராஜ், இளநீர் பறித்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!
மின்சாரம் தாக்கி மரணம்
ஒருகட்டத்தில் அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்துவிடவே, மின் வயரில் சிக்கியதில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சென்னை: ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்ற இளைஞர் பலி.. பதறிய பொதுமக்கள்..!