மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடனை அடித்தே கொன்ற குடும்பம்.. ஆவேசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சோகம்.!
வீடுபுகுந்து திருட முயற்சித்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், பரமேஸ்வர மங்களம் கிராமத்தில் இருக்கும் வீட்டில், சம்பவத்தன்று மர்மமான வகையில் நுழைந்த இளைஞர் திருட முயற்சித்ததாக தெரியவருகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறவே, சத்தம் கேட்டு வந்த அவரின் குடும்பத்தினர் என 3 பேராக இளைஞரை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு... பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.!! மடக்கி பிடித்த பொதுமக்கள்.!!
தகவல் அறிந்து வந்த தக்கோலம் காவல்துறையினர், இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இளைஞரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
3 பேர் கைது
இந்த விஷயம் குறித்து இளைஞரை தாக்கிய பெண் உட்பட 2 பேர் என 3 நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களின் மீது கொலை வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
பல வழக்குகளில் தொடர்புடைய நபர்
மேலும், உயிரிழந்த இளைஞர் மாதேஷ் என்பது, அவரின் மீது கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். வீடுபுகுந்த திருடனை வீட்டிற்குள் பூட்டி வைத்து காவல்துறையினர் அணுகி இருந்தால், கொலை வழக்கில் இருந்து தப்பித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆவேசம் அல்லது ஆத்திரத்தில் நடத்தப்படும் தாக்குதல் எதிராளியின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தால், அதுவும் சட்டப்படி குற்றமே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை அருகே பயங்கரம்... இளம் பெண் அடித்து கொலை.!! 3-வது கணவர் கைது.!!