மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமே வேண்டாம்., விஷம் குடித்த மாப்பிள்ளை.! மருத்துவமனையில் வைத்தே நடந்த திருமணம்.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, கிருஷ்ணவரம் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 25). அங்குள்ள ஆற்காடு கரிகாந்தங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் லாவண்யா (வயது 19).
இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட, விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் திருமணத்திற்கு எதிர்ப்பு கூறியுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற மாப்பிளை
இதனால் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக ரத்னகிரி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே, மணமகன் தினேஷ் வீட்டில் இருந்த எறும்பு மருந்து மற்றும் பிற மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.!! தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!!
மருத்துவமனையில் திருமணம்
பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணமகன் மற்றும் பெற்றோர், மருத்துவர் சம்மதத்துடன் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் லாவண்யாவை தினேஷ் கரம்பிடித்தார்.
திருமணத்திற்கு பின் தினேஷ் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!