தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
#Breaking: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; எங்கெங்கு விடுமுறை? விபரம் இதோ.!
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வடகடலோர மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தென்பெண்ணையாறு, கெடிலம், சங்கராபரணி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டடங்கள் தத்தளிக்கின்றன.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் வெள்ளம் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்ட பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்குக்கும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!