திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரை கொன்ற மது பழக்கம்.. மகளை அசிங்கமாக பேசிய தந்தை.!! 14 வயது சிறுமியின் விபரீத முடிவு.!!
திருப்பூர் அருகே மது பழக்கத்திற்கு அடிமையான தந்தை, போதையில் மகளை தவறாக பேசியதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான தந்தை
திருப்பூர், காங்கேயம் ரோடு அருகே உள்ள மருதப்பன் நகரை சேர்ந்தவர் வீரப்பன்(44). இவருக்கு திருமணமாகி சாதனா என்ற 14 வயது மகள் இருந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வீரப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்திருக்கிறார். இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்திருக்கிறது.
போதையில் மகளை அவதூறாக பேசிய தந்தை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீரப்பன் வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்திருக்கிறார். அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சிறுமி சாதனா, தந்தையிடம் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த வீரப்பன் மகள் சாதனாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!
கிணற்றில் குதித்து தற்கொலை
இதனைக் கேட்டு விரக்தியடைந்த சாதனா அருகே உள்ள கோவில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து சாதனாவின் உடலை தேடியது. இரவு முழுவதும் தேடியும் உடல் கிடைக்காததால் மறுநாள் காலை சாதனாவின் உடலை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவரது சடலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பயங்கரம்... சாலையில் வீசப்பட்ட தலை.!! கொலையாளிகள் யார்.? பரபரப்பு விசாரணை.!!