மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையில் பயங்கரம்... சாலையில் வீசப்பட்ட தலை.!! கொலையாளிகள் யார்.? பரபரப்பு விசாரணை.!!
மதுரை அருகே சாலையில் கிடந்த தலையால் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தலையை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர.
சாலையில் கிடந்த தலை
மதுரையில் உள்ள நத்தம் சாலை அருகே உடல் இல்லாமல் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மோப்ப நாயை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு அருகே உள்ள வழித்தடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கிடைத்திருப்பதால் உடலை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்.!! மாணவன் பலி.!!
60 வயது முதியவர்
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் துண்டிக்கப்பட்ட தலை 60 வயது முதியவருடையதாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா.? அவரது தலை எதற்காக சாலையில் வீசப்பட்டது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கோபியில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி கர்ப்பம்.!! 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.!!