திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வட்டியும் வரல முதலும் வரல.." பைப்பால் தாக்கப்பட்ட ஆசிரியர்.!! பைனான்சியர் உட்பட 3 பேர் கைது.!!
திருச்சியில் பைனான்சியரிடம் கடன் வாங்கிய தொகைக்கு வட்டிப் பணம் செலுத்தாததால் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பைனான்சியர் மற்றும் 2 உதவியாளர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர் பைனான்சியரிடம் கடன்
திருச்சி அருகே ஸ்ரீரங்கம், மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன், திருச்சி சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரிடம் வட்டிக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.
வட்டியை செலுத்தாததால் தாக்கப்பட்ட ஆசிரியர்
இதனைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வாங்கிய கடனுக்கு ராமச்சந்திரன் வட்டி கட்டவில்லை. இந்நிலையில் உறையூரில் உள்ள பைனான்சியர் சத்திய மூர்த்தியின் அலுவலகத்திற்குச் சென்ற ராமச்சந்திரன் வட்டி பணம் குறித்து அவருடன் விவாதித்திருக்கிறார். அப்போது இருவருக்கிடையே வாக்குவாதமாகிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர்களான பாட்ஷா மற்றும் ராகேஷ் ஆகியோர் பிவிசி பைப்பை எடுத்து ஆசிரியர் ராமச்சந்திரனை கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 18 வயதில் கொலை கேஸ்., 19ல் துள்ளத்துடிக்க படுகொலை.. திருச்சியில் நடுரோட்டில் சினிமா பாணியில் பயங்கரம்.. அலறிய பொதுமக்கள்.!
பைனான்சியர் உட்பட 3 பேர் கைது
இது தொடர்பாக தாக்கப்பட்ட ஆசிரியர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பைனான்சியர் சத்தியமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர்களான பாட்ஷா, ராகேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வட்டி பணம் செலுத்தாததால் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "என்னையா இப்படி எறங்கிட்டிங்க.." இயற்கை உபாதை கழித்தத்தில் முன் விரோதம்.!! பெண் படுகொலை.!!