லாரி வடிவில் வந்த எமன்! உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பயணித்தவர் பரிதாப பலி.!



selam---ammapetai---selvam---ampulence-death

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், இவரது மகன் செல்வம்(56). காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வந்த செல்வம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மேல் சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். இதனால் சேலத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்வம் பயணம் செய்துள்ளார். ஆம்புலன்ஷை அருள் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். செல்வத்தோடு அவரது உறவினர்களான ரஞ்சித், மாது, அன்பழகன்,  மணிமேகலை ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

selam

இந்நிலையில் சங்ககிரி அடுத்த சின்னகவுண்டனூர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரிவு சாலையில் கோவை செல்வதற்காக லாரி ஒன்று திரும்பியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இந்த விபத்தில் அனைவரும் காயமடைந்தனர். குறிப்பாக செல்வம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவசர சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்வம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேசமயம் ஓட்டுநர் உட்பட படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிர் பிழைக்க வேண்டி உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பயணித்தவரை விட்டுவைக்காத  எமன் லாரி வடிவில் வந்து அவரது உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.