உன் சாதிக்கு புல்லட்டு கேக்குதா.? இளைஞரின் கைகளை வெட்டி அட்டூழியம் செய்த ஆதிக்க சாதியினர்.!



sivakasi-young-college-boy-attacked-by-four-who-using-b

பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆதிக்க சாதி வெறி கும்பலால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

எப்படி புல்லட் ஓட்டலாம்.? :

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலப்பிடவூர் எனும் கிராமத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஐயாசாமி என்ற நபர் புல்லட் வாகனம் ஓட்டியுள்ளார். இதை பார்த்த ஆதிக்க சாதியினர் சிலர் அந்த இளைஞரை மரித்து, "இந்த ஜாதியை சேர்ந்த நீ எல்லாம், எப்படி புல்லட் ஓட்டலாம்.?" என்று கேட்டு அவரது கைகளை வெட்டி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் குடித்தனம்.. மனைவியின் கதைமுடித்த கணவன்.. ஈரோட்டில் பயங்கரம்.!

sivakasi

வீட்டின் மீது தாக்குதல்

மேலும் ஐயாசாமியின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தற்போது, அய்யாசாமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினரால் இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் பதற்றம்

இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் ஆதி, வினோத், வல்லரசு, ஈஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. புல்லட் ஓட்டிய காரணத்தால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய பெண்ணுடன் கள்ளக்காதல்.. கர்ப்பமானதால் கொலை.. திருச்சியில் பயங்கரம்.!