மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏய் எங்களுக்கு நடுவுல நீ யாருடி... குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன் - கஸ்தூரி தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கஸ்தூரி அருகில் உள்ள தனது தாய் வீடான கல்யாணி வீட்டிற்கு சென்று விடுவார்.
சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கஸ்தூரி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியை அழைத்து வர குப்பன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் கஸ்தூரி மற்றும் குப்பனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை மாமியாரான கல்யாணி தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குப்பன் நீங்களுக்கு நடுவுல நீ யாருடி என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை குத்தியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கஸ்தூரி, கல்யாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.