நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
ஆரணி - மதுரை வழித்தடத்தில் பேருந்துகள்? அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பதில்.!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அவை உறுப்பினர்களின் கேள்வி நேரம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இன்று முன்னாள் அமைச்சர் & அதிமுக உறுப்பினர் ஆரணி சேவூர் ராமச்சந்திரன், ஆரணியில் இருந்து மதுரைக்கு நேரடி பேருந்து சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆரணி - மதுரை பேருந்து
இந்த விஷயத்துக்கு பதில் அளித்த தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், "ஆரணியில் இருந்து திருச்சிக்கு 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு செல்ல விரும்புபவர்கள், திருச்சி சென்று அங்கிருந்து மதுரைக்கு செல்லலாம்.
இதையும் படிங்க: வீரியம் தெரியாத விஜய்க்கு பதில் சொல்லனுமா? - அமைச்சர் சிவசங்கர் காட்டம்.!
ஆரணி - சென்னை பேருந்து
திருச்சியில் இருந்து மதுரைக்கு பலநூறு பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது. ஆரணியில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆரணி - மதுரை வழித்தடத்தில் பேருந்து இயக்குவதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலால் கம்பி என்னும் காதலன்.. பெற்றோருக்கு வலைவீச்சு.. காதலித்து, கருகலைத்து கைவிட்டதால் சிறைவாசம்.!