இன்ஸ்டா காதலால் கம்பி என்னும் காதலன்.. பெற்றோருக்கு வலைவீச்சு.. காதலித்து, கருகலைத்து கைவிட்டதால் சிறைவாசம்.!

இன்ஸ்டாகிராமில் அருகமான பெண்ணை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த காதலன் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வைத்து வருபவர் நிகிலன் (23). இவர் பிஇ பட்டதாரி ஆவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பிசியோ பயின்று வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. காதலின் போது பல்வேறு வார்த்தையை கூறி நிகிலன் ரூ.3 இலட்சம் பணம், 4 சவரன் நகைகளை வாங்கி இருக்கிறார். பலமுறை திருமணம் செய்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அத்துமீறவும் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்; 3வது மனைவியுடன் கணவர் விபரீதம்..! இருவரும் மரணம்.!
இளைஞர் கைது - பெற்றோருக்கு வலைவீச்சு
இதனால் பெண்மணி கர்ப்பமான நிலையில், திருமணம் செய்ய வேண்டும் என்றால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பெண்ணும் திருமணத்துக்காக கருவை கலைத்துள்ளார். ஆனால், நிகிலன் பெண்ணிடம் இருந்து கம்பி நீட்ட முயற்சித்துள்ளார்.
இதனை புரிந்துகொண்ட பெண்மணி, நிகிலனின் பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார். அவர்களோ பேனை மிரட்டி அனுப்பி வைத்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல்துறையினர், நிகிலனை கைது செய்தனர். மேலும், அவரின் பெற்றோர் முத்துகிருஷ்ணன்-கிருத்திகாவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!