"திராவிட மாயையில் இருந்து தமிழக மக்கள் விடுபடுக" - தமிழிசை சவுந்தர்ராஜன்!



Tamilisai Soundarrajan Pressmeent On 1 June 2024 

 

2024 மக்களவை தேர்தலில் பாஜக 350 க்கும் அதிகமான இடங்களில் மீண்டும் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். எனினும், ஜூன் 04 ம் தேதி முடிவுகளின்படியே வெற்றி-தோல்வி இறுதியாகும்.

சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், "இன்று எனது பிறந்தநாள். பிறந்தநாளில் தெலுங்கானா மாநிலத்தின் உதயநாளை கொண்டாடுவார்கள். எனது அம்மா உனது பிறந்தநாளை மாநிலமே கொண்டாடுகிறது என்பார். எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விருப்பம் இல்லை எனினும், இன்று மகிழ்ச்சியாக உள்ளது. தந்தை வேலூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் ஆசி வாங்க வேலூர் சென்று வந்துவிடுவேன். 

இதையும் படிங்க: அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்; ஆளுநர் மளிகை விளக்கம்.!

திராவிட மாயையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்

மகிழ்ச்சியான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். பாரத பிரதமர் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அந்த தகவல் கருத்து கணிப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு வளர்ச்சியடையப்போகிறது. திராவிட மாயையில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும். இல்லையேல் கஞ்சா, போதை, விபத்துகள் ஏற்படும். 

மரியாதைக்குரிய மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் மீண்டும் தேர்வு செய்வதை போல, தமிழகம் தேசியத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அதற்கான வழி பிறந்துள்ளது. அது இன்னும் வளம்பெற வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பாஜக திராவிட இயக்கத்தின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் களமிறங்கி இருக்கிறது. வெற்றி கட்டாயம் கிடைக்கும் என நம்புகிறோம்" என கூறினார். 

இதையும் படிங்க: சென்னை: பணியிட பழக்கம்; லிவிங் டுகெதர் காதலியின் நிர்வாணா போட்டோ லீக்.. 39 வயது நபர் கைது.!