தடையை மீறி காவி உடை, கையில் வேலுடன் காரில் புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் முருகன்.!
தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இன்று திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் யாத்திரையை முடிக்க பாஜக திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் திட்டமிட்டபடி யாத்திரையை துவக்க, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் முடிவு செய்துள்ளார். இதனால் திருத்தணி நகரம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருத்தணியில் 5 இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நகரத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. கட்சி வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்துவதற்காக காவி உடை அணிந்து, வேலுடன் காரில் திருத்தணி புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார் முருகன்.