கர்ப்பிணி பெண்களே காய்ச்சலா? அலட்சியம் வேண்டாம்.. தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!



Tamilnadu Health Ministry Says Pregnant Women Fever 

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கான நோய்களான கொசுக்களின் காரணமாக டெங்கு பாதிப்பும் சமீபத்தில் அதிகரித்து இருந்தது. மேலும், திடீர் மழை, வெயில் காரணமாக காய்ச்சல் போன்ற நோய்கள் பலருக்கும் ஏற்பட்டு இருந்தது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலன் அடைந்து வருகின்றனர். மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மண்டல வாரியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது தமிழ்நாட்டில் டெங்குவுடன் எலிக்காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்கள் பாதிப்பு ஏற்பட்டுவதாக தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: திருப்பூர்: கைகளை கண்ணாடி கிழிந்தாலும், 65 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்; நெகிழ்ச்சி செயல்., குவியும் பாராட்டுக்கள்.!

tamilnadu

கர்ப்பிணி பெண்கள் கவனம்

இந்நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அதனை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால், காய்ச்சல் ஏற்பட்டதும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுயமாக மருந்துகள் எடுத்து பின் தாமதமாக மருத்துவமனைக்கு வராமல், முன்கூட்டியே கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திருமணமான 9 மாதத்தில் சோகம்... போதை ஊசி மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது இளைஞர்.!!