திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருப்பூர்: கைகளை கண்ணாடி கிழிந்தாலும், 65 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்; நெகிழ்ச்சி செயல்., குவியும் பாராட்டுக்கள்.!
தனியார் பேருந்து ஓட்டுநர் 65 பயணிகளின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழில் நகரமான கோவை, திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான அரசு, தனியார் பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்து, தினமும் கோவை - திருப்பூர் இடையே தனது சேவையை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: 9 மாத கைக்குழந்தை, பெண் உட்பட 3 பேர் பலி; திருப்பூரில் பயங்கரம்.. பட்டாசு வெடித்துச் சிதறி சோகம்.!
கடந்த அக்.01 அன்று திருப்பூரில் இருந்து மாலை நேரத்தில் புறப்பட்ட பேருந்து, கோவை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தை தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய சுரேந்திரன் என்பவர் இயக்கி இருக்கிறார்.
கண்ணாடி உடைந்தது
பேருந்து கோவையை நோக்கி பயணிக்கும்போது, தேசிய நெடுஞ்சாலையில் தென்னம்பாளையம் பகுதியில் வந்த சமயத்தில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்துபோனது. இதனால் ஒருகணத்திற்கும் குறைவான நேரத்தில் ஓட்டுநர் உட்பட அனைவரும் பதறிப்போன நிலையில், ஓட்டுநர் விரைந்து சுதாரித்து ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டார்.
இதனால் வாகனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்தவர், கண்ணாடிகள் கைகளை கிழித்தபோதும் சாதுர்யமாக செயல்பட்டு பாலத்தின் மீது பயணித்த பேருந்தை இலாவகமாக கீழே இறக்கி, சாலையோரம் பத்திரமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.
ஓட்டுனர் நலமுடன் இருக்கிறார்
கிட்டத்தட்ட 65 பயணிகள் உயிர் ஓட்டுநர் சுரேந்திரனால் காப்பாற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தலை, கை, கால்கள் மீது கண்ணாடிகள் கிழித்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின் அவர் தற்போது நலன்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பொழுது பயணிகளின் உயிரைப் பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருள்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை பாதுகாத்து காப்பாற்றினார். இதனிடையே ஓட்டுநர் சுரேந்திரன் பயணிகளின் உயிரை காப்பாற்றிய காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கண்ணாடி உடைந்து நொறுங்கிய காட்சிகள்
திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென சல்லி சல்லியாக உடைந்து விழுந்த சிசிடிவி காட்சி.. காற்று அதிகமாக வீசியதால் பேருந்து கண்ணாடி உடைந்ததாக தகவல்..#Tirupur | #Bus | #Safety | #Transport | #PolimerNews pic.twitter.com/feCbygL1dE
— Polimer News (@polimernews) October 9, 2024
மாறுபட்ட கோணத்தில் வெளியான காட்சிகள்
#Watch | திடீரென உடைந்த தனியார் பேருந்தின் கண்ணாடி - துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!
— Sun News (@sunnewstamil) October 9, 2024
திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென நொறுங்கி விழுந்துள்ளது. லேசான காயமடைந்த பேருந்து ஓட்டுநர் சுரேந்திரன், துரிதமாக செயல்பட்டு… pic.twitter.com/3qMQZuy9dl
இதையும் படிங்க: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில் சோகம்.!