மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய்ப்பாடு சரியாக சொல்லாததால் சிறுமியின் காதை கிழித்த ஆசிரியர்.. கதறும் பெற்றோர்!
கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுமி வாய்ப்பாடு சரியாக சொல்லாததால், சிறுமியின் காதை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த மீனவர் ஒருவரின் 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். என்ன நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சிறுமியின் தாய் ஏன் அழுகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு சிறுமி பள்ளியில் 6வது வாய்ப்பாடு சரியாக சொல்லாததால் கணக்கு ஆசிரியர் அடித்து காதை கிழித்ததாகவும், பின்னர் அவரே காயத்திற்கு மருந்து போட்டு விட்டதாகவும்
சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சிறுமியின் தாய் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.