#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதரில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. போலிஸார் விசாரணை.!
கன்னியாகுமரி மூஞ்சிறையிலிருந்து மங்காடு செல்லும் வழியில் புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சத்தம் வரும் புதர் அருகில் சென்று தேடிப் பார்த்த பொழுது உடலில் துணி சுற்றப்பட்ட நிலையில் ஒரு குழந்தை இருந்துள்ளது. மேலும் அங்கு இருந்தது ஆண் குழந்தை என்றும் பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த குழந்தையை மீட்ட மக்கள் உடனடியாக புதுக்கடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அனுமதித்தனர். மேலும் யார் அந்த குழந்தையை அங்கு வீசி சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பச்சிளம் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.