மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறுவீட்டுக்கு போன 2K மணப்பெண்.. விடிய விடிய ஊரையே சுற்றியே குடும்பம்.. தவித்து போன கணவன்.!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருக்கும் தென்கரையைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற 21 வயது பெண்ணுக்கு, 22 வயது இளைஞர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 21 -ல் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
நள்ளிரவில் தவித்த மணமகன்
இந்த நிலையில் தனது கணவருடன் மாரிஸ்வரி தனது தாய் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், விருந்து சாப்பிட்டுவிட்டு இரவு அனைவரும் தூங்க சென்றனர். நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாப்பிள்ளை தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுத்து கிடந்த தனது மனைவியை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.!! தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!!
விடிய விடிய தேடல்
சற்று நேரம் தேடிப் பார்த்த அவர் மனைவி எங்கும் காணவில்லை என்று உடனே உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார். விடிய விடிய அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாரீஸ்வரி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, அந்த கணவர் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரில் மாரிஸ்வரியின் முன்னாள் காதலன் சுப்பையா பாண்டியன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
முன்னாள் காதலனுடன் ஓட்டம்
தனது மனைவியும், அந்த சுப்பையா பாண்டியனும் அடிக்கடி செல்போனில் பேசியதை தான் கவனித்ததாகவும் அவர்களை கண்டித்ததாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிஸ்வரி மற்றும் அவரது காதலன் சுப்பையா பாண்டியன் இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீளா துயரம் ... ஆசையாக வளர்த்த மகள் செய்த துரோகம்.!! தந்தையின் பரிதாப முடிவு.!