மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீளா துயரம் ... ஆசையாக வளர்த்த மகள் செய்த துரோகம்.!! தந்தையின் பரிதாப முடிவு.!
செல்லமாக வளர்த்த மகள் பெற்றோரின் பேச்சை மீறி காதலனை திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த தந்தை கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்ல மகள்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் கீழத் தெருவை சேர்ந்தவர் சுந்தர். 50 வயதான இவர் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரூபா. இந்த தம்பதியினருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இவர்களது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நண்பருடன் காதல்
கல்லூரியில் படித்து வந்த சுந்தரின் மகள் தன்னுடன் படிக்கும் நண்பரை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே மகளுக்கு அறிவுரை கூறி காதலை வேண்டாம் என சொல்லி இருக்கின்றனர். எனினும் அவர்களது மகள் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் தீவிரமாக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்... சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த காதலன்.!! நண்பனின் மூலம் ஸ்கெட்ச் போட்ட தந்தை.!!
பெற்றோரை மீறி திருமணம்
இந்நிலையில் சுந்தரின் மகள் திடீரென தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர் சவுதி அரேபியாவில் இருந்து உடனடியாக சொந்த ஊர் திரும்பினார். தனது மகள் பேச்சை மீறி காதலனை திருமணம் செய்து கொண்டதால் விரக்தியில் இருந்தாலும் செல்ல மகளின் ஆசைக்காக திருமணத்தை ஏற்றுக் கொண்டார். எனினும் அவரால் மன உளைச்சலில் இருந்து மீள முடியவில்லை.
விபரீத முடிவு
சம்பவம் நடந்த இரவு அன்று வீட்டின் மாடிக்கு செல்வதாக கூறி சென்ற சுந்தர் நீண்ட நேரம் திரும்பாததால் அவரது மனைவி மாடிக்குச் சென்று சுந்தரை தேடி இருக்கிறார். அப்போது கழிவறையின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. மேலும் கழிவரையில் இருந்து முனங்கல் சத்தம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மனைவி ரூபா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துள்ளார். அப்போது கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார் சுந்தர். இதனைத் தொடர்ந்து சுந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சுந்தரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சை மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பதற வைக்கும் தகவல்... இறந்த தாய் உடலுடன் பூஜை செய்த மகன்.!! இறுதியில் எடுத்த விபரீத முடிவு.!!