மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் குளியறையில் ரகசிய கேமரா.. விளாத்திகுளம் அருகே அம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்.!
அம்மன் கோவிலில் பெண்கள் குளிக்கும் அறையில் 3 ரகசிய கேமிரா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூரை சார்ந்த பக்தர்களும் வந்து செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில், குளியலறையுடன் கூடிய பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமிரா இருப்பதாக கூறி பெண் பக்தர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது 2 ரகசிய கேமரா, சார்ஜர் போன்றவை கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வரவவில்லை என்றாலும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.