மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆம்னி பேருந்தில் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு குட்கா கடத்தல்.. சினிமா பாணியில் 25 கி.மீ சேசிங்.. நெல்லையில் பரபரப்பு.!
அண்டை மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தும் செயல் அதிகரித்து வந்த நிலையில், நெல்லையில் தனியார் ஆம்னி பேருந்து இவ்வழக்கில் காவலர்கள் வசம் சிக்கிக்கொண்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்களை ஒடுக்க மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலமாகவும் குட்கா கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்துள்ளன.
இந்த நிலையில், நெல்லை புதிய பேருந்து பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஆம்னி பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தை அதிகாரிகள் இடைமறித்தபோது, நிற்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது.
இதனால் சுதாரித்த அதிகாரிகள் திரைப்பட பாணியில் ஆம்னி பேருந்தை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். சாலையில் சென்றவர்கள் பலரும் சேஸிங்கை பார்த்து பதறிய நிலையில், 25 கி.மீ தூரம் பேருந்து விரட்டி செல்லப்பட்டுள்ளது. இறுதியாக நாங்குநேரி வாகைக்குளம் பகுதியில் பேருந்து சுற்றிவளைக்கப்பட்டது.
இந்த பேருந்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் 8 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த 125 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை செய்ததில், அவர்களுக்கு தெரிந்தே குட்கா கடத்தப்பட்டது உறுதியானது. இதுகருத்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.