விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
பர்வத மலைப் பயணத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி நபர் மாரடைப்பால் மரணம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலைக்கு, ஆபத்தான மலை வழிப்பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். இங்கு மலையேற்றம் சற்று சவாலான விஷயம் என்பதால், பலரும் அங்கு சென்று வருகிறார்கள். மேலும், சிவபக்தர்கள் பலரும் பர்வத மலைக்கு விரும்பிச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, மாட்டப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் சமீபத்தில் பர்வத மலைக்குச் சென்றிருந்த நிலையில், மலையின் மீதே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருத்தணி: ஊராட்சி செயலாளர் நெஞ்சை பிடித்து சரிந்து விழுந்து மரணம்; ஊரக வளர்ச்சி ஆய்வுக்கூட்டத்தில் சோகம்.!
உடல் மீட்பு., பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இந்த விஷயம் குறித்து கடலாடி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ரமேஷின் சடலத்தை மீட்டுக் கொண்டு வந்தனர்.
தற்போது ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் திருவண்ணாமலை விரைந்தனர். மலையேற்ற பயணங்களின்போது அனுபவம் இல்லாத நபர்களுக்கும், உடல் வலிமை இல்லாத நபர்களுக்கும் சிலநேரம் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகின்றன.
இதனால் இவ்வாறான பயணத்தை மேற்கொள்வோர், அப்பயணத்திற்கு முன்னர் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
இதையும் படிங்க: ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!