மகளிர் தின விழா 2025: தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முத்தான அறிவிப்புகள்.. விபரம் இதோ.!



TN CM MK Stalin Women's  Day Announcement 8 March 2025 


சர்வதேச மகளிர் தின விழா, மார்ச் 08 ம் தேதியான இன்று உலகளவில் சிறப்பிக்கப்பட்டது. மகளிருக்கு பெருமை சேர்க்கும் இன்றைய நாளில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைப்பக்கத்தை நிர்வகிக்கும் வாய்ப்பை இன்று பெற்றிருந்தார். 

பல துறைகளில் சாதனைகளை படைத்தது வரும் பெண்களின் பெருமையை போற்ற, இன்று கொண்டாட்டங்களுடன் மகளிர் தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பிலும், சிறப்பாக மாநில அளவில் விளங்கிய பெண்களுக்கு பரிசும் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதையும் படிங்க: #Breaking: மருத்துவமனையில் தயாளு அம்மாள்.. நேரில் வந்த முக அழகிரி.!

MK Stalin

அதன்படி, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ. 72 கோடி மதிப்பில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களைப் பெறலாம்.

கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெறப்படுகின்ற பல்வேறு கடன்கள் பெற முன்னுரிமை வழங்கப்படும்.

கோ-ஆப் டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

இ-சேவை மையங்களில், 10 விழுக்காடு சேவைக் கட்டணம் குறைவு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!