திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
#Breaking: அப்படிப்போடு.. பட்ஜெட் அறிவிப்பில் '₹' க்கு பதிலாக 'ரூ' குறியீடு.. மாஸ் காண்பிக்கும் தமிழ்நாடு அரசு.!

மும்மொழி கொள்கை, தேசிய கல்விக்கொள்கை விஷயத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு - மத்தியில் ஆளும் பாஜக அரசு இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவாதத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் சர்ச்சையை வார்த்தைகளை பயன்படுத்தி திமுக எம்.பிக்களை விமர்சித்து இருந்தார்.
அதுவரை மாநில அரசும் - மத்திய அரசும் கடிதங்கள் வாயிலாக தங்களின் தகவலை பகிர்ந்துகொண்ட நிலையில், மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு பல விவாதங்களை தூண்டியது. அரசியல் ரீதியான கடும் எதிர்ப்புக்கும் வழிவகை செய்தது. ரூ.10000 கோடி கொடுத்தாலும், மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் கிடையாது என திமுக அரசு கூறியுள்ளது.
இதையும் படிங்க: மார்ச் 31 வரை ரேஷனில் இலவசமாக கிடைக்கும்.. தவற விடாதீர்கள்.!
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் சார்பில் அதற்கான முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ரூபாயை சுருக்கமாக இந்திய அரசு ₹ என்ற லோகோ வழியாக குறிக்கும். தமிழ்நாடு அரசின் விளம்பரத்திலும் இதுநாள் வரை ₹ என்ற சுருக்கமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் விளம்பர வீடியோவில், தமிழ்நாடு அரசு ₹ என்ற லோகோவுக்கு பதிலாக, ரூ என்ற தமிழ் எழுத்தை பதிவு செய்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2010 ல் இருந்து இந்திய அரசால் ₹ என்ற எழுத்து பணத்தை குறிக்க பயனப்டுத்தப்படுகிறது. தேவனாகிரி, லத்தின் மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ₹ குறியீடை பயன்படுத்தி வந்த நிலையில், ரூ என்ற தமிழுக்கு தற்போது தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.150 கோடி மதிப்புள்ள 90 ஏக்கர் நிலம்; முதல்வர் பிறப்பித்த உத்தரவு., துணை முதல்வர் அறிவிப்பு.!