"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்கள் கோடை மழையை பெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கம் என்பது இல்லாமல் மக்கள் மகிழ்ச்சி சூழலில் இருக்கின்றனர்.
ரிமால் புயல்
அதேபோல, வங்கக்கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், அழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ரிமால் புயலாக வலுப்பெற்று 25ம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
3 மணிநேரத்திற்கு கனமழை
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிய்த்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!