திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளுத்துவாங்கும் மழை; பள்ளி-கல்லூரிகளுக்கு 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக தமிழ்நாட்டில் 1 வாரத்திற்கு மழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சென்னையில் அதிகனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் சென்னை
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு நேற்றே விடுமுறை அறிவித்தது. மேலும், மாநகரில் வெள்ளம் போன்றவை ஏற்பட்டால், சாலைகள், சுரங்கபாதைகளில் நீர் தேங்கினால் உடனடியாக அகற்றவும் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து பலியான 17 வயது பள்ளி மாணவி; மதுரையில் சோகம்.!
அக்டோபர் 15 கீழ்காணும் மாவட்டத்தில் மழை
இன்று தமிழ்நாட்டில் மயிலை, நாகை, திருவாரூர், சென்னை மாவட்டத்தில் அதி முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டத்தில் கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் புதுச்சேரி - காரைக்காலில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலத்துல இப்பவே இடம் பிடிச்சிரலாம்.. வெல்லத்தை நினைத்து வேதனையில் வேளச்சேரி மக்கள்.. செய்த காரியம் என்ன?