பாலத்துல இப்பவே இடம் பிடிச்சிரலாம்.. வெள்ளத்தை நினைத்து வேதனையில் வேளச்சேரி மக்கள்.. செய்த காரியம் என்ன?



in-chennai-velachery-rain-car-parked-at-bridge

 

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்னும் சில தினங்களில் தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே, தலைநகர் சென்னைக்கு இன்றும், நாளையும் மிககனமழை எச்சரிக்கையானது கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

சென்னை நகரை பொறுத்தமட்டில், வேளச்சேரி பள்ளத்தில் இருக்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக மழை நேரத்தில் வெள்ளத்தின் பிடியில் கடுமையாக சிக்கிக்கொள்கிறது. இதனால் அங்கு வசிக்கும் நபர்களின் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையாகியுள்ளது. 

இதையும் படிங்க: படிக்கட்டில் தொங்கியபடி அசால்ட் பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து கதறிய நட்புகள்.. கேடில் முடிந்த கொண்டாட்டம்.!

அணிவகுத்தது நிற்கும் கார்கள்

இந்நிலையில், இந்த விஷயத்திற்கு திடீர் மாற்றுத்தீர்வை கண்டறிந்துள்ள அங்குள்ள மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் தற்போதில் இருந்தே தங்களின் கார்களை நிறுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பாலத்தின் ஓரங்களில் கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

விதியை மீறிய வாகனங்களுக்கு அபராதம்?

இந்த விசயத்திற்கு சென்னை காவல்துறை தரப்பில் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை எனினும், விரைவில் விதியை மீறி கார்களை நிறுத்தியதாக அபராதம் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் பயத்தால் இந்த செயலை அவர்கள் செய்துள்ளதால், அதிகாரிகளும் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.

இரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல், விரைவில் பாலத்தில் வாகன நெரிசல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரி இரயில் நிலையத்தில் வான் சாகச நிகழ்ச்சியை காண மெரீனாவுக்கு செல்ல அளவுக்கு அதிகமான பயணிகள் குவிந்த காணொளி வெளியானது. இதனிடையே, மழை வெள்ளத்துக்கு பயந்து வேளச்சேரி மக்கள் தங்களின் கார்களை பாலத்தில் நிறுத்தும் முனைப்புடன் செயல்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காதலின்போதே நெருக்கம்.. வீடியோ எடுத்து ரூ.20 இலட்சம் கேட்டு மிரட்டிய காதலன்.. நிச்சயமானபின் கொடுமை.!

இதனிடையே, பாலத்தில் வாகனம் நிறுத்தியதற்கு முதலில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவசர காலம் கருதி அதனை கைவிடுவதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. வாகனம் நிறுத்த பாதுகாப்பான இடம் குறித்து கேட்டறிய காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என தாம்பரம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவசர அழைப்புக்கு 94981 81500 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.