Gold Silver Rate Today: தங்கம் வாங்க இதுவே வாய்ப்பு.. இன்று விலை அதிரடி குறைவு..!



Today Gold Silver Price 27 FEb 2025 

 

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. 

ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் , கடந்த 6 மாதங்களுக்கு உள்ளாக ரூ 14 ஆயிரம் வரை விலை உயர்வு ஏற்பட்டு, தற்போது ரூ. 65 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.! 

gold

இன்று தங்கம் விலை

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் தங்கம் ரூ.64080 க்கு விற்கப்படுகிறது. 

கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து, இன்று ரூ.8010 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.106000 க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் வெள்ளி விலை ரூ.109000 வரை சென்றிருந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது.

இதையும் படிங்க: 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!