3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!



in Tirunelveli a Govt Hospital Doctors Removed LED Bulb from Child right bronchus 


தூத்துக்குடி பகுதியில் வசித்து வரும் தம்பதியின் 3 வயது மகன் விகான், சம்பவத்தன்று விளையாடும்போது எதிர்பாராத விதமாக எல்இடி பல்பை விழுங்கி இருக்கிறார். இதனால் அவர் மூச்சுத்திணறி அவதிப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, சிறுவனை பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: சறுக்கல் விளையாட்டில் சோகம்.. சிறுமியின் விரல் துண்டானது.. பராமரிப்பில்லாத பூங்காவில் துயரம்.!

நெல்லை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் இணைந்து சிறுவனின் மூச்சுக்குழாய்யில் இருந்த எல்இடி பல்பை அகற்றினர். 

இதனால் சிறுவனின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. மருத்துவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.

இதையும் படிங்க: தாயின் சடலத்துடன் சைக்கிளில் வலம்வந்த மகன்; கலங்கவைக்கும் துயரம்.!