மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி காட்டிய "ஆபரேஷன் அகழி".. கட்டப்பஞ்சாயத்து ரௌடிசத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றும் திருச்சி எஸ்.பி..!
திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாவிப் பொதுமக்களின் நிலங்களை பறித்து வருவதாக தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு புகார்கள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளர் காமினி ஆகியோர் உத்தரவின்பேரில், ஆபரேஷன் அகழி (Operation Agazhi) என்ற பெயரில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்த தனிப்படை நேற்று 14 காவல் ஆய்வாளர்கள், 14 உதவி காவல் ஆய்வாளர்கள், 42 காவலர்கள் என தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் மொத்தமாக 258 நில ஆவணங்கள், 82 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னாள் நா.த.க பிரமுகர் கைது:
மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் பிரமுகரான பட்டறை சுரேஷ் என்பவரின் வீட்டில் மட்டும் மொத்தமாக 66 நிலம் தொடர்பான அசல் பாத்திரங்கள், 31 பாண்டிச்சேரி மாநில மதுபானம் கைப்பற்றப்பட்டது. ஆய்வின்போது தப்பியோடிய நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பிரமுகர் எடமலைபுதூர் பகுதியை சேர்ந்த சந்திரமௌலி முக்கொம்பு பகுதியில் மடக்கி பிடிக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: சொத்து தகராறு... அண்ணனின் ஆணுறுப்பை அட்டாக் செய்த தம்பி.!! வினோத சம்பவம்.!!
ரௌடி கும்பலால் பொதுமக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டால், அதன் ஆவணங்கள் மிரட்டி வாங்கப்பட்டால், கந்துவட்டி கொடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்தால் உடனடியாக புகார் அளிக்குமாறும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டா கத்தியுடன் வார்டு உறுப்பினருக்கு பாமக நிர்வாகி பகிரங்க கொலை மிரட்டல்; வீடியோ வைரலானதால் கைது.!