ஆபரேஷன் மூலம் குழந்தை.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் துடிதுடித்து மரணித்த பெண்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு எலிசபெத் ராணி என்ற மனைவி இருந்துள்ளார். 11 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. தற்போது அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எலிசபத் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த எலிசபெத் ராணி இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் கழிப்பறைக்கு சென்று இருக்கிறார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்துள்ளார்.
இதில், எலிசபெத் மயக்கமடைந்து சுய நினைவை இழந்துள்ளார். இது தாய் ஜெயாவதியை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர், கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவசர சிகிச்சை பிரிவில் எலிசபெத்தை அனுமதித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் தின விழா 2025: தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முத்தான அறிவிப்புகள்.. விபரம் இதோ.!
ஆனால் எலிசபெத் ராணிக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை பிறந்து 20 நாட்கள் கூட ஆகாத நிலையில் தாய் உயிரிழந்திருக்கும் சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!